நாடாளுமன்றத் தெரிவுக்குழு தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது: ஜே.வி.பி

618

anuraநாடாளுமன்றத் தெரிவிக்குழு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

பிரச்சினையை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளை ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பின அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் அரசாங்கம் இவ்வாறான பல்வேறு தெரிவுக்குழுக்களை நியமித்திருந்தது. எனினும் இவற்றின் மூலம் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காமைக்கான காரணத்தை அறியத்தருமாறு கட்சித் தலைவர் கூட்டத்தில் வினவப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவி வரும் இனப்பிரச்சினையை தமிழ், சிங்கள முஸ்லிம் மக்கள் ஏற்படுத்தவில்லை. எனவே இந்தப் பிரச்சினைக்கு அவர்கள் பொறுப்பதாரிகளல்ல.

நாட்டை ஆட்சி செய்த முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகார மோகமே பிரிவினைவாதத்தை தூண்டியது.

அரசாங்கத்தின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்ற மெய்யான நோக்கமும், அவசியமும் அரசாங்கத்திற்கு கிடையாது என்றே கருதுகின்றோம் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.