பேராதனை மாணவன் – மாணவியின் உடல் பாகங்கள் காட்டுப் பகுதியிலிருந்து மீட்பு

668

peraபேராதனை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் மற்றும் மாணவியின் உடல் பாகங்கள் அக்குரஸ்ஸ வில்பிட வனப் பகுதியில் இருந்து இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

உடல் பாகங்கள் கிடைந்த இடத்தில் இருந்து கிடைத்த தேசிய அடையாள அட்டைகள் மூலம் உயிரிழந்தவர்கள் 23 வயதான கிஷான் சஜித் மற்றும் 26 வயதான திலினி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.