ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட சொல்லிக்கொடுப்பார் அசாருதீன் : காம்ளி கிண்டல்!!

329

azhar

அசாருதீனை பயிற்சியாளராக நியமித்தால் ஆட்ட நிர்ணயத்தில் எப்படி ஈடுபடுவது என்று இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ளி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான அசாருதீனுக்கு ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கடுப்புடன் வினோத் காம்ளி பதிவிட்டிருக்கிறார். அதில் ஏக்தா கபூர் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் பற்றி ஒரு படம் எடுக்க விரும்புகிறாராம்.

அந்த படத்துக்கு “Ali Baba mil gaya chalish choro se” என்றுதான் பெயர் வைக்கலாம். கிரிக்கெட் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதை குரோஞ்சி ஒப்புக் கொண்டுவிட்டார்.

ஆனால் நமது முன்னாள் அணித்தலைவர் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அனேகமாக அவர் இளைஞர்களுக்கு எப்படி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவது என பயிற்சி கொடுக்க விரும்புகிறார் என்று நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு அசாருதீன் மீது அதிரடிப் புகாரைக் கூறியிருந்தார் காம்ளி. 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கெதிரான அரையிறுதி போட்டியில் களத்தடுப்பு செய்ய அசாருதீன் முடிவெடுத்தது பற்றி சந்தேகம் எழுப்பியிருந்தார். அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.