இலங்கை அகதி முகாமில் ஐந்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!!

743

child rape

நாமக்கல் மாவட்டம் பரமத்தி, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ஐந்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிய முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நாமக்கல் மாவட்டம், பரமத்தி, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் கண்ணன்(40). அவருக்கு, ஐந்து வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது மனைவி சுமதி, குடும்பத்தகராறு காரணமாக, மூன்று மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

கண்ணன், தினந்தோறும் வேலைக்குச் செல்வதால் தன் மகளை அருகில் உள்ள தன் தாயார் மீனாள் பாதுகாப்பில் விட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் ராஜா 30 என்பவர், குடிபோதையில் மீனாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள முட்புதருக்குச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது ராஜா தப்பியோட முயன்றார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராஜாவை பிடித்து நையப்புடைத்தனர்.

பின்னர், அவ்வழியாக ரோந்து சென்ற டி.எஸ்.பி. உதயகுமாரிடம், ராஜாவை ஒப்படைத்தனர். பரமத்தி பொலிஸார் வழக்கு பதிந்து, ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.