4 வயது சிறுவனின் கால் முட்டிக்குள் வாழ்ந்த கடல் நத்தை!!(படங்கள்)

433

சிறுவன் ஒருவன் விளையாடும் போது தவறுதலாக முட்டுக்கால் பகுதிக்குள் சென்ற நத்தையை தற்போது வெளியே எடுத்து மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனர். விளையாடும் போது சிறுவர்களுக்கு அடிபடுவது இயல்பு தான். அப்படி அடிபடும் வேளைகளில் உடலில் வீக்கம் ஏற்படுவதுண்டு.

சில சமயங்களில் அத்தகைய வீக்கங்களில் சில முள் போன்றவைக் கிடைப்பதுண்டு. ஆனால், அமெரிக்கச் சிறுவனின் கால் வீக்கத்தில் இருந்து வெளிவந்த சிறிய நத்தையைக் கண்டு அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின், ஆரஞ்ச் கவுன்டி பகுதியில் வாழ்ந்து வருபவர் ராச்சல். இவரது 4 வயது மகன் போல் பிராங்ளின்.

கடந்த மாதம் பிராங்க்ளின் வீட்டருகே உள்ள புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அச்சிறுவனுக்கு முட்டியில் காயம் உண்டானது.

சிறிய காயம் தானே என அவனது பெற்றோர்கள் அசட்டையாக இருந்து விட மூன்று வாரத்துக்கு பிறகு, சிறுவனின் மூட்டுகளில் வீக்கம் உண்டானது. தொடர்ந்து அந்த வீகம் சீழ் பிடித்து புண்ணாக மாறியது.

வீட்டிலேயே முதலுதவி செய்ய நினைத்த சிறுவனின் பெற்றோர், வீக்கத்தை அழுத்தி சீலை வெளியேற்றினர். அப்போது, கல் போன்று ஒன்று வெளியேறியது. தானாக நகர்ந்த அந்தக் கல்லை உற்று நோக்கிய போது தான் அது கடல் நத்தை என்பது தெரியவந்தது.

அதிர்ந்து போன அவர்கள், பின்னர் அந்த குட்டி நத்தையை பிடித்து கழுவி தற்போது மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனராம். பிராங்ளின் கீழே விழுந்த போது புல்வெளியில் கிடந்த நத்தையின் முட்டை சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்தின் வழியாக உள் சென்று வளர்ந்து நத்தையாக வெளியேறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

4 3 2