கடந்த ஓர் ஆண்டில் 180 கோடி சம்பாதித்த டோனி!!

394

dhoni

உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டில் (ஜூன் 2012–ஜூன் 2013) வீரர்களுக்கு போட்டி மூலம் கிடைத்த சம்பளம், போனஸ், பரிசு தொகை, விளம்பரம் மூலம் கிடைத்த வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி 180 கோடி சம்பாதித்து உலக அளவில் 16வது இடத்தை பிடித்துள்ளார். டென்னிஸ் வீரர் ரபெல் நடால் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முன்னேறி உள்ளார்.

டோனி கடந்த ஆண்டின் பட்டியலில் 31வது இடத்தில் இருந்தார். தற்போது 15 இடங்கள் முன்னேறி இருக்கிறார். அந்த அளவுக்கு அவர் சம்பாதிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்.

இந்த பட்டியலில் மற்ற ஒரே இந்தியரான டெண்டுல்கரும் இடம் பெற்று உள்ளார். அவர் 31வது இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 125 கோடி சம்பாதித்து உள்ளார்.

கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் 445 கோடி (அமெரிக்கா) சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 408கோடி சம்பாதித்து 2வது இடத்திலும், கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட் 353 கோடி சம்பாதித்து 3வது இடத்திலும் உள்ளனர்.

பார்முலா 1 கார்பந்தய வீரர் பெர்னாண்டோ அலோன்சா (ஸ்பெயின்) 19வது இடத்திலும், மற்றொரு வீரர் லீவிஸ் ஹேமில்டன் (இங்கிலாந்து) 26வது இடத்திலும், டென்னிஸ் வீரர் ஜோகோவிச் (செர்பியா) 28வது இடத்திலும், ரபெல் நடால் (ஸ்பெயின்) 30வது இடத்திலும், தடகள வீரர் உசேன் போல்ட் 40வது இடத்திலும் உள்ளனர்.

அதிக பணம் சம்பாதித்த வீராங்கனைகளில் மரியா ஷரபோவா (ரஷியா) 9வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார். டென்னிஸ் வீராங்கனையான அவர் 165 கோடி சம்பாதித்து உள்ளார். செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 117 கோடி சம்பாதித்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளார்.