இணையதளத்தில் புதிய படம் வெளியீடு : உரிமையாளர் கைது : இணையதளம் முடக்கம்!!

366

kick_ass

தகவல் திருட்டு இணையத்தளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இணையதளத்தின் நிறுவுனரும் போலந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிக் ஆஸ் டாரண்ட்ஸ் இணையத்தளத்தில் புதிய படங்கள், இசை அல்பங்கள் என அனைத்தும் முறையான அனுமதி பெறாமல் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. ஒன்லைனில் படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்து வந்தது.

சுமார் 100 கோடி டொலர்கள் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக புகார் எழுந்ததை அடுத்து அமெரிக்க நீதித்துறையால் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தின் நிறுவுனர் ஆர்டம் வாலின் என்பவர் தகவல் திருட்டு, பண மோசடி ஆகிய குற்றங்களின் கீழ் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்டம் வாலியின் அப்பிள் போன் மற்றும் ஐகிளவுட் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவரைக் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.