விபத்துக்களில் இருந்து உயிர் பிழைக்கும் சுப்பர் மேன்!!(படங்கள்)

496

11

உலகளாவிய ரீதியில் வாகனப் பாவனை அதிகரித்துள்ள நிலையில், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், மனிதனின் உடலமைப்பு எவ்வாறு இருந்தால் விபத்துக்களில் இருந்து உயிர் பிழைக்க முடியும் எனும் ஆராய்ச்சியை அவுஸ்திரேலிய நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அதன் முடிவில், ”சுப்பர் மேன்” எனும் விந்தையான மனித சிற்பத்தை உருவாக்கிக் காட்டியுள்ளார்கள். அதனை அவுஸ்திரேலியாவில், விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் பயன்படுத்தி வருகின்றார்கள்.

அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர், கார்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தும் நிபுணர் ஆகியோருடன் சேர்ந்து மெல்போர்ன் நகரைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞர் பேட்ரிசியா பிசினினி இணைந்து இந்த விந்தையான மனித சிற்பத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

இந்த செயற்கை மனிதனுக்கு கிரஹாம் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த செயற்கை மனிதனின் உடலின் ஒவ்வொரு உறுப்பும், எலும்புகளும் வாகன விபத்தின்போது மோதல்களைத் தாங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தட்டையான முகம், விபத்தின்போது அதிர்வுகளைத் தாங்கும் வகையில் கழுத்து இல்லாத உடலமைப்பு மற்றும் மூளையைக் காக்கும் விதத்தில் பெரிய மண்டை ஓட்டு அமைப்புடன் இந்த சிற்பத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

வலிமையான தேக அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மனிதனின் நெஞ்சுக்கூட்டில் காற்று அறைகளுடன் கூடிய எலும்புகளும் உள்ளன.

இதன்மூலமாக, இதயத்தைப் பாதுகாக்க முடியும் என்பதுடன், மோதல் அதிர்வுகளைக் காற்று அறைகள் உள்வாங்கிக்கொள்ளும் என்கின்றனர். அத்துடன், சிராய்ப்புகளைத் தவிர்க்கும் தடிமனான தோல் அமைப்பும் உள்ளது.

முழங்காலுக்கும், கணுக்காலுக்கும் இடையில் கூடுதலாக ஒரு மூட்டு எலும்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது பாதசாரிகள் விபத்தில் சிக்கும்போது அடிபட்டால் கூட இந்த கூடுதல் மூட்டு எலும்பு தப்பிப்பதற்கு உதவும் என்கின்றனர்.

12 13 14 15 16 17