மின்னல் தாக்கி இளம்பெண் பலி – மாங்குளத்தில் சம்பவம்..!

1161

vavuniyaவவுனியா, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸர் தெரிவித்தனர்.

அவர் தனது வீட்டின் கிணற்றடியில் இருந்தவேளை மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதான கிருஷ்ணா நிர்மலாதேவி என பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மாங்குளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.