உலக அழகிப் போட்டியை நடத்த எதிர்ப்பு!!

770

miss

இந்தோனேசியாவில் அடுத்த வருடம் நடத்தப்படவுள்ள உலக அழகிப்போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தோனேசியாவின் மிகவும் செல்வாக்கு உள்ள உலமா சபையின் இஸ்லாமிய மதக்குருக்களின் உயர் மட்டம் கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் பெண்கள் தங்களின் தோலை காட்டி நடந்து வரும் இப்போட்டியானது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து இஸ்லாமிய மதக்குருக்கள் இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசு இப்போட்டியை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் புகைப்பிடித்தல் மற்றும் யோகாவிற்கு எதிராக பல முரண்பாடான உத்தரவுகளை உலமா சபை பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. உலமா சபை விதித்துள்ள இந்த உத்தரவை மீறுவது பாவம் என்று இந்தோனேசிய மக்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.