
தென் ஆபிரிக்காவில் 7 வயது சிறுமி ஒருவர் தனது 6 வயது தோழியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆபிரிக்காவில் உள்ள பிரயோரியா பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி லிம்போபோ மாகாணத்தின் பேலா பேலா என்ற கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தப்போது அங்கு அவளது தோழியான 6 வயது சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
இந்த இரண்டு சிறுமிகளும் விளையாடிக்கொண்டிருந்தப்போது, 7 வயது சிறுமி தன்னுடைய தாத்தாவின் கைத்துப்பாக்கியை வைத்து மற்றொரு சிறுமியை பயமுறுத்தியிருக்கிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக அச்சிறுமி மற்றொருவரை சுட்டுவிட முகத்தில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் பொலிசார் விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கவனக்குறைவாக துப்பாக்கியை வைத்திருந்ததாக சிறுமியின் தாத்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் 0.38 ரக துப்பாக்கியை கொண்டு மற்றொருவரை சுட்டதால் ஏற்பட்ட இந்த விபரீதம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





