கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து 6 வயது சிறுவன் சாதனை!!

577

c1

பிரிட்டனில் 6 வயது சிறுவன் ஒருவன் உள்ளூர் கிரிக்கெட் அணியில் நிரந்தர உறுப்பினராக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளான்.
பிரிட்டனின் நியூபோர்ட்டை சேர்ந்த பார்சன்ஸ்(வயது 27) கிரிக்கெட் வீரர்.

இவரது மகன் ஹரிசன்(வயது 6), சிறு வயதில் இருந்தே தந்தையிடம் இருந்து கிரிக்கெட்டை கற்று வந்துள்ளான். தற்போது தந்தையை விடவும் சிறப்பாக விளையாடி அசத்தி வருகிறான்.

சமீபத்தில் உள்ளூர் போட்டி ஒன்றில் தந்தையும் மகனும் களமிறங்கினர்.
இதில் ஹாரிசன் 24 ஓட்டங்களும், அவரது தந்தை 15 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து உள்ளூர் கிரிக்கெட் குழுவில் நிரந்தர உறுப்பினராகி உள்ளான். இதுகுறித்து பார்சன்ஸ் கூறுகையில், நான் விளையாட்டாகத்தான் ஹரிசனை கிரிக்கெட் போட்டிக்கு அழைத்து சென்றேன்.

ஆனால் அவனோ என்னை விட கூடுதலாக ஓட்டங்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டான்.

மிகவும் சிறியவனாக இருந்தாலும் அவனைவிட வயதும் அனுபவமும் அதிகமுள்ள பந்து வீச்சாளர்களின் பந்துகளை மிகவும் நேர்த்தியாக சந்திக்கிறான்.

இன்னும் திறமையாக விளையாடி இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலும் இடம்பிடிப்பான் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஹரிசனின் தாய் பெகி பார்சன் கூறுகையில் ஹரிசன் நடக்கத் தொடங்கும் முன்னரே கிரிக்கெட்டை ரசித்து பார்ப்பான் என்றும் அந்த அளவுக்கு விளையாட்டின் மேல் ஆர்வம் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

c2