
கனடாவில் மூட்டைப் பூச்சி விவகாரம் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளது.
கனடாவின் கியூபெக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் லாரென்ட் அசோலாய் என்பவர் அறை எடுத்து தங்கினார்.
அந்த அறையில் மூட்டைப் பூச்சிகள் அதிகம் இருந்ததால் நிர்வாகியிடம் காண்பித்துள்ளார். உடனே அவர் 40 டொலர்கள் தருகிறோம் வேறு ஹோட்டல் சென்று தங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அதனை ஏற்காதவர் இரவு முழுவதும் அதே அறையிலேயே தங்கியுள்ளார். இதன் பின்பு இணையதள சுற்றுலா வலைத்தளத்தில் ஹோட்டல் பற்றி கிண்டல் செய்து விமர்சனம் எழுதியுள்ளார்.
இதனை நீக்கும்படி நிர்வாகம் கேட்டுக் கொண்டும் அதனை மறுத்துள்ளார். இதனையடுத்து தங்கள் வர்த்தகத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளது.





