உலகிலேயே முதல் முறையாக பீட்சா வழங்கும் ஏ.டி.எம்!!

687

11

அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் உலகிலேயே முதல் முறையாக 3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் யை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏ.டி.எம் என்பது இதுவரை பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் பீட்சா விற்பனைக்காக ஏ.டி.எம் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த இயந்திரத்தில் தொடு திரையினால் ஆன திரையில் நமக்கு தேவையான பீட்சாவினை தெரிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்படும் பீட்சா Owen க்குள் சென்று 3 நிமிடத்தில் ரெடியாகி துண்டு துண்டாக நறுக்கப்பட்ட நிலையில் நமது கையில் வந்து சேர்ந்து விடும்.

24 மணி நேரமும் இயங்கும் இந்த பீட்சா ஏ.டி,எம் இயந்திரம் நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த பீட்சவின் விலை 10 அமெரிக்க டொலர்கள் மட்டுமே.

டெபிட், கிரெடிட் மற்றும் ஸ்டூடண்ட் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த பீட்சாவை வாங்கமுடியும்.

12