வவுனியாவில் விபத்தில் பலியான குடும்பஸ்தரின் இறுதிக் கிரிகைகள் இன்று : சோகமயமாக கிராமம்!!

924

 
வவுனியா மன்னார் வீதியில் நேற்று முன்தினம் (12.08.2016) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த குமாரசாமி ரமணகுமார் என்ற 39 வயது குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த குமாரசாமி ரமணகுமார் என்ற குடும்பஸ்தரை பூவரசங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

எனினும் போதிய வசதிகள் பூவரசங்குளம் வைத்தியசாலையில் இன்மையினால் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றைய தினம் பலியான குமாரசிங்கம் ரமணகுமாரின் சடலத்தினை உறவினர்கள் ஏற்ற மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

பொய்யான காரணங்களை பொலிஸார் தெரிவித்து குற்றவாளியினை நிரபராதி ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும். உரிய நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தினை பெற முடியாது எனத் தெரிவித்து உறவினர்களும் கிராம மக்களும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில் இன்று அவரது கிராமத்தில் இறுதிக் கிரிகைள் இன்று (14.08.2016) நடைபெற்றது. இவரது மரணத்தால் இக் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் சற்றுமுன் பதட்டம்!!

 

1 13900629_275924282780630_1327705764_n 14012163_275944309445294_1728947566_n 14017748_275924392780619_1037889868_n 14030747_275924086113983_1080427249_n 14031046_275924072780651_2035479996_n