கழிவறை கடதாசிகளின் உதவியுடன் தரையிறக்கப்பட்ட விமானம்!!

365

Plane

இரவு நேரத்தில் தொலைத்­தூர பிர­தே­ச­மொன்றில் கழி­வறைக் கடதாசிகளை தீ மூட்­டி­யதன் மூலம் கிடைத்த வெளிச்­சத்தின் உத­வி­யுடன் விமா­ன­மொன்று தரை­யி­றக்­கப்­பட்ட சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் ரோயல் பிளையிங் டொக்டர் சேர்விஸ் (Royal Flying Doctor Service) எனும் பறக்கும் மருத்­துவ சேவை அமைப்பின் விமா­ன­மொன்றின் விமா­னி­க­ளுக்கே இந்த அனு­பவம் ஏற்­பட்­டது.

1928 ஆம் ஆண்டு முதல் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இயங்கி வரும் மருத்­துவ அமைப்பு இது. தமது குழு­வினர் எதிர்­நோக்கும் சவால்­களை சுட்­டிக்­காட்டும் வகையில், கடந்த 31 ஆம் திகதி தமது விமா­னி­க­ளுக்கு ஏற்­பட்ட மேற்­படி அனு­பவம் குறித்து அவ்­வ­மைப்பு சமூக வலைத்­ த­ளங்­களில் தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

குறித்த இரவில், பண்­ணை­யொன்றில் பணி­யாற்றும் பெண்­ணொ­ரு­வ­ருக்கு நோய் ஏற்­பட்­டுள்­ள­தாக தகவல் கிடைத்­தது. எமது மருத்­துவ குழு­வினர் உட­ன­டி­யாக விமா­னத்தின் மூலம் பறந்­தனர்.

ஆனால், இரு­ளான அப்­ப­கு­தியில் விமா­னத்தை இறக்­கு­வ­தற்கு ஏற்ற பகு­தியை அடை­யாளம் காண்­ப­தற்கு விமா­னி­களால் முடி­ய­வில்லை.

அதை­ய­டுத்து ஒளியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு என்ன வழி என தொலை­பேசி மூலம் அங்­கி­ருந்­த­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. தம்­மிடம் கழி­வறை கட­தாசி சுருள்கள் இருப்­ப­தாக அங்­கி­ருந்­த­வர்கள் கூறினர்.

அக்­ க­ழி­வறை கட­தா­சி­களை டீசலில் நனைத்து தீ மூட்­டு­மாறு அதி­கா­ரிகள் ஆலோ­சனை கூறினர். அதன்­படி கழி­வறை கட­தா­சிகள் தீ மூட்­டப்­பட்­டன.

30 மீற்றர் அக­ல­மான பரப்பில் சுமார் அரை மணித்­தி­யாலம் இவ்­வாறு கழி­வறை கட­தா­சிகள் தீ மூட்­டப்­பட்­டன என அதி­காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த வெளிச்சத்தின் உதவியுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி, நோயாளியான பெண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.