தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளர் தயா மாஸ்டர் இன்று (15.08.2016) பிற்பகல் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு அரச உத்தியோகத்தர்களின் பிணையிலும் ஜந்து லட்சம் காசுப் பிணையிலும் செல்ல வவுனியா மேல் நீதமன்ற நீதவான் (10.08.2016) புதன்கிழமை உத்தரவிட்டார்.
இதற்கமைய இன்று நான்கு அரச உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் கையோப்பமிட்டதுடன் ஜந்து லட்சம் ரூபா பணமும் நீதிமன்றத்தில் கட்டப்பட்டது.
அத்துடன் தினசரி காலை 9 மணியிலிருந்து 12 மணிக்குள் யாழ் பொலிஸ் நிலையத்தில் கையோப்பமிட வேண்டுமெனவும் வடமாகாணத்தை விட்டு வெளி மாகாணத்திற்கு செல்ல முடியாது என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டார்.






