செட்டிக்குளம் பொலிஸ் பிரிவின் செட்டிக்குளம் – மதவாச்சி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதவாச்சியில் இருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த டிபர் வாகனம் ஒன்று குறித்த மூதாட்டி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி பின் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலியானவர் நேரியக்குளம் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 78 வயதான நடராஜா வீரம்மா எனத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின்போது சிறு காயங்களுக்குள்ளான டிபர் வாகனத்தின் சாரதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
செட்டிக்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





