அரபு, சீனமொழிகளில் வெளிவருகிறது திருக்குறள்!

316

thirukkural

உலகமொழிகளில் தமிழ் இலக்கிய படைப்புகளை கொண்டு வரும் வகையில் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக சீன, அரேபிய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

தமிழ் மொழி தமிழ் இலக்கிய சிறப்பை உலக நாடுகளுக்கு உணர்த்த தமிழின் மிகச்சிறந்த நூல்களை பல்வேறு மொழிகளில், மொழிபெயர்க்கும் பணிகளில் தமிழ் வளர்ச்சித்துறை ஈடுபட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

திருக்குறளின் ஒட்டுமொத்த குறள்களும், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் தேர்ந்தெடுத்தப் படைப்புகளும், மொழிபெயர்க்கப்படுகின்றன. பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளை, சீன மொழிகளில் மொழிபெயர்க்க, 60 லட்சம் ரூபாய், அரபு மொழியில் மொழி பெயர்க்க, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் சீன, அரேபிய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணி முற்றிலும் முடிவடைந்து வெளியிட தயார் நிலையில் உள்ளது. கூடிய விரைவில், பாரதியார், பாரதிதாசன் படைப்புகளும் சீன, அரேபிய மொழிகளில் தயாராகி விடும்.