தங்கையின் கணவன் மீதுள்ள மோகத்தால் கணவனைக் கொன்ற இரண்டாவது மனைவி!!

621

Murder-knife(C)

தங்­கையின் கணவன் மீது ஏற்­பட்ட மோகத்தால் மனை­வி­யொ­ருவர் கண­வனைக் கொலை செய்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமிழகத்தின் நெல்லை மாவட்டம் பரப்­பாடி அருகேயுள்ள கல்­மா­ணிக்கம் கிரா­மத்தை சேர்ந்­தவர் தங்­கராஜ் (60). இவ­ருக்கு முதல் மனைவி மூலம் 3 மகன்­களும், ஒரு மகளும் உள்­ளனர். கடந்த 15 ஆண்­டு­க­ளுக்கு முன்பு முதல் மனைவி இறந்­து­விட்டார்.

இந்­நி­லையில் ராமக­னியை(36) தங்­கராஜ் இரண்டாவது திரு­மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்­நி­லை­யி­லேயே, ராமகனி தனது தங்­கையின் கண­வ­னோடு உல்­லாச வாழ்க்கை நடத்த ஆசைப்­பட்டு கண­வனை கொலை செய்­துள்ளார். இத­னை­ய­டுத்து, மனைவி ராமகனி மற்றும் அவ­ரது கள்­ளக்­கா­தலன் ஆகி­யோரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இது குறித்து ராம­கனி பொலி­ஸா­ரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, எனது கண­வ­ருக்கும், எனக்கும் அதிக வயது வித்­தி­யாசம் இருந்­தது. ஆரம்­பத்தில் எங்கள் வாழ்க்கை சந்தோ­ஷ­மாக இருந்­தது.

கடந்த ஓராண்­டுக்கு முன்பு எனது தங்கை உத்­தி­ர­க­னியின் கணவர் அன்­ப­ழ­கனும், நானும் தனி­யாக சந்­தித்து பேசினோம். அப்­போது முதல் எங்கள் இரு­வ­ருக்குள்ளும் நெருக்கம் ஏற்­பட்­டது.

லொறி சார­தி­யாக இருந்த அவர் அடிக்­கடி வெளி­யூரில் வேலைக்கு செல்­வ­தாக கூறி­விட்டு என்னுடன் வந்து உல்­லா­ச­மாக இருப்பார்.

நானும், தங்கை வீட்டுக்கு செல்­வ­தாக எனது கண­வ­ரிடம் கூறி விட்டு சென்று விடுவேன். நாங்கள் இரு­வரும் அடிக்­கடி வெளி­யி­டங்­க­ளுக்கு சென்று உல்­லா­ச­மாக இருந்து வந்தோம்.

கடந்த 4 மாதங்­க­ளுக்கு முன்பு, வெளி­யூரில் வேலைக்குச் சென்­றி­ருப்­ப­தாக தங்­கை ­யிடம் கூறிவிட்டு அன்­ப­ழகன், எங்கள் தோட்­டத்தில் வந்து தங்­கினார். பக்­கத்தில் லொறி ஓட்டி வரு­வ­தாக எனது கண­வ­ரையும் கூறி நம்ப வைத்து அவர் எங்­க­ளுடன் இருந்தார்.

ஒரு­வாரம் அவர் எங்­க­ளுடன் தங்­கி­யி­ருந்தார். அப்­போது அன்­ப­ழ­கனும், நானும் பல­முறை உல்லாச­மாக இருந்தோம். இது எனது கண­வ­ருக்கு தெரியவரவே, அன்­ப­ழ­கனைக் கண்­டித்து அனுப்­பிவிட்டார். என்­னையும் கண்­டித்தார்.

இதனால், எங்­க­ளுக்குள் அடிக்­கடி தக­ராறு ஏற்­பட்டு வந்­தது. என்னால் அன்­ப­ழ­கனை பிரிந்திருக்க முடி­ய­வில்லை. இதை­ய­டுத்து தங்­க­ராஜை கொலை செய்யத் திட்­ட­மிட்டோம்.

எங்களது கொலைத் திட்­டத்­துக்கு தூத்­துக்­குடியிலுமுள்ள எனது அக்­காவின் மகன் ராமு­வையும்(22) துணைக்கு அழைத்து, கணவர் என்னை கொடுமைப்படுத்­து­வ­தாக ராமு­விடம் கூறினேன்.

சம்­பவம் நடந்­த­போது, அன்­ப­ழ­க­னுக்கு போன் செய்து, வெளியே படுத்திருந்த எனது கண­வரை கொலை செய்யுமாறு கூறினேன். இதனையடுத்து அவர் கொலை செய்தார்.

இதைத்தொடர்ந்து, தலைமறை வாகியிருந்த கள்ளக் காதலன் அன்பழகன், ராமு ஆகிய 2 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.