ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு எதிராக 908 பேர் மொட்டையடித்து ஆர்ப்பாட்டம்!!

380

K3

தென் கொரி­யாவைச் சேர்ந்த 908 பேர் தமது தலை­களை மொட்­டை­ய­டித்துக் கொண்­டதன் மூலம், தமது நகரில் அமெ­ரிக்­காவின் ஏவு­கணை எதிர்ப்பு பொறி­முறை ஸ்தாபிக்­கப்­ப­டு­வதற்கு எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

சியோங்ஜூ எனும் பிரா­ந்தி­யத்தைச் சேர்ந்த மக்­களே இவ்­வாறு விநோ­த­மான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளாவர்.

வட­கொ­ரி­யாவின் ஏவு­கணைத் தாக்­கு­தலை முறி­ய­டிப்­ப­தற்­காக சியோங்ஜூ பிராந்­தி­யத்தில் வட­ அமெ­ரிக்­காவின் அதி நவீன ஏவு­கணை எதிர்ப்புப் பொறி­முறை ஸ்தாபிக்­கப்­ப­டு­வ­தற்குத் தீர்மானிக்கப்­பட்­டுள்­ளது.

இத்­ தீர்­மா­னத்­துக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில், கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற மேற்­படி எதிர்ப்பு நிகழ்வு நடை­பெற்­றது. இதில் 908 பேர் தமது தலை­களை மொட்­டை­ய­டித்துக் கொண்­டனர் என ஏற்­பாட்­டாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.
இது மிகவும் வலி­மை­யான எதிர்ப்பு வெளிப்­பா­டாகும் என அவர் கூறினார். கடந்த ஜன­வரி மாதம் தனது நான்­கா­வது அணு­வா­யுத சோத­னையை வட­கொ­ரியா நடத்­தி­யது.

அதன்பின் செய்­ம­தி­யொன்றை ஏவி­ய­துடன் ஏவு­கணை சோத­னை­க­ளையும் நடத்­தி­யது. இதனால், தென் கொரி­யா­வுக்கும் வட­கொ­ரி­யா­வுக்கும் இடை­யி­லான பதற்­ற­நிலை அதி­க­ரித்­துள்­ளமை குறிப்பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், நவீன ஏவு­கணை எதிர்ப்புப் பொறி­மு­றையை ஸ்தாபிப்­ப­தற்குப் பொருத்­த­மான இடத்தை தான் ஆராய்ந்து வரு­வ­தாக தென் கொரிய ஜனா­தி­பதி பார்க் க்வென் ஹை அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­வேளை, சியோங்ஜூ பிராந்தியத்தில் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை நிறுவ அங்குள்ள மக்கள் ஆட்சேபித்தால் வேறு இடம் கருத்திற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

K1 K2