பழைய முயற்சியில் இறங்கிய விஜயகாந்த்!!

752

Vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் கட்சியை பலப்படுத்த பழைய முயற்சியை கையில் எடுத்துள்ளார். கட்சி தொடங்கப்பட்டபோது, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியினரை அவர் அடிக்கடி சந்தித்தார். கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்றார். இதுமட்டுமின்றி பொது மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கி போராடினார்.

ஆனால் எதிர்க்கட்சி தலைவரான பின் அவரது நடவடிக்கைகள் மாறின. சென்னையில் இருந்தபடியே, நிர்வாகிகளை இயக்க ஆரம்பித்தார்.
இதன் எதிரொலியாக, லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. இதனால் அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள், 90 சதவீதம் பேர் வெளியேறி விட்டனர்.

ரசிகர் மன்றத்தில் இருந்து கட்சிக்கு வந்தவர்கள் மட்டுமே, அதிகளவில் எஞ்சியுள்ளனர்.

இந்நிலையில் கட்சியை பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக, தன் பழைய, முயற்சியை அவர் கையில் எடுத்துள்ளார்.

வெளிமாவட்ட நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசுவது, அவர்களை சென்னை அழைத்து ஆலோசிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை விஜயகாந்த் துவங்கி உள்ளார்.

இதுமட்டுமின்றி, விஜயகாந்த் உத்தரவுப்படி, அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.