சென்னையை உலுக்கிய உமா மகேஷ்வரி கொலை : குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி!!

631

Murder

சென்னையை உலுக்கிய ஐடி ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை அடுத்த சிறுசேரியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த சேலத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில், சந்தேகத்தின் பேரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த உத்தம் மண்டல், உஜ்ஜல் மண்டல், ராம் மண்டல் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் திகதி செங்கல்பட்டு நீதிமன்றம் குற்றவாளிகளை உறுதி செய்து மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்தனர் குற்றவாளிகள்.

மேல்முறையீடு மனு தொடர்பான விசாரணையில், குற்றவாளிகள் மீதான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள்.

மேலும் பாதிக்கப்பட்ட உமா மகேஸ்வரியின் குடும்பத்திற்கு 4 மாதத்திற்குள் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.