டில்லியைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் 12 வயதில் கடத்தப்பட்டதுடன், 10 ஆண்டுகளாக கும்பலாக 400இற்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கடத்தியவர்களிடமிருந்து தப்பி வந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் தாய், கடந்த 2006ஆம் ஆண்டு தனது 12 வயது மகள், தங்கை வீட்டுக்கு செல்லும் போது, கடத்தப்பட்டுள்ளார் என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கடத்தப்பட்ட பெண் 10 வருடங்களுக்கு பிறகு, 22 வயது பெண்ணாக பல்வேறு நபர்களால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு தனது வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார் என்றும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாவது,
சம்பவத்தன்று எனது சித்தி வீட்டிற்கு செல்லும் போது சிலர் என்னை மயக்கமருந்து தடவிய கைக்குட்டையால் என் முகத்தை அழுத்தியதால் மயக்கமடைந்தேன்.
அதன் பின் ஒரு விபசார கும்பலால் யாரோ சிலருக்கு விற்கப்பட்டேன். என்னை பலமுறை கும்பலாகச் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவார்கள்.
அவர்கள் மேலும் பல விபசார தரகர்களால் என்னை பலருக்கு விற்பனை செய்தார்கள். சில காமுகர்கள் என்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சிகரெட்டால் சூடு வைத்தும் உடல் ரீதியாகவும் என்னை துன்புறுத்துவார்கள். எனது உடல் தீ காயங் கள் மட்டுமில்லாமல் மனதும் காயமடைந்துள்ளது.
இவ்வாறு பல கொடுமைகளை அனுபவித்து எனது வாழ்க்கையை பதாளத்தில் தொலைத்துள்ளேன். மேற்கு வங்கம், பஞ்சாப், குஜராத், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்களுக்கு விற்கப்பட்டு சித்திரவதை அனுபவித்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், கடத்தப்பட்ட நாளிலிருந்து இதுவரை 400இற்கும் மேற்பட்டோரால் கும்பலாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளேன் என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின்படி தற்போது, 61 மற்றும் 70 வயதான இரண்டு முதியோர் உட்பட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.






