ராம்குமாருக்கு சுவாதி யார் என்பதே தெரியாது : பேஸ்புக்கில் சிக்கிய பரபரப்பு ஆதாரம்!!

574

Swathi

ராம்குமாருக்கு சுவாதி யார் என்பதே தெரியாது. இந்த உண்மையை அவரது பேஸ்புக்கிற்கு உள்ளே கவனிக்கும் நம்மால் உணர முடியும் என தமிழச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

சுவாதி படுகொலை – காவல்துறையினரால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராம்குமார் பேஸ்புக் உள்ளே இருக்கும் தகவல்கள் என்ன? வாருங்கள் உண்மைகளை கண்டறிவோம்!

சென்னை பொலிஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், சுவாதி படுகொலை வழக்கில் ‘ராம்குமார்தான் குற்றவாளி’ அறிவித்த போது அதற்கான காரணங்களையும் விளக்கினார்.

“பேஸ்புக்கில் முதன்முறையாக சுவாதியை ராம்குமார் பார்த்த போது அவர் மீது காதல் கொண்டார்” என்றும் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்த போது சுவாதி ஏற்றுக் கொண்டார் எனவும் கூறப்பட்டது. அதற்கு பிறகு 6 மாதங்களாக பேஸ்புக் மூலமாக இருவரும் தொடர்பில் இருந்ததாகவும் அவப்போது பேஸ்புக்கில் ‘சாட்’ செய்தார்கள் எனவும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு பிறகு சுவாதியை அடிக்கடி சந்திப்பதற்காக சுவாதி குடியிருந்த ஏரியாவிலேயே ராம்குமார் வாடகை அறை எடுத்து தங்கி அங்கிருந்த துணிக்கடை ஒன்றில் வேலை செய்து கொண்டு அடிக்கடி சுவாதியின் பின்னால் சுற்றியதாகவும் கூறப்பட்டது.

“சென்னைக்கு வந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் சுவாதியை சந்தித்து தன் காதலை ராம்குமார் வெளிப்படுத்திய போது, சுவாதி ‘தேவாங்கு’ என்று திட்டியதால் ஆத்திரமடைந்த ராம்குமார் ஜீன் 24 இல் சுவாதியை கத்தியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தலைமறைவானார்” என்பதுதான் போலிஸ் தரப்பு தகவல்.

ஆனால் ராம்குமார் ஜவுளி கடையில் வேலை செய்யவும் இல்லை. சுவாதியின் பின்னால் சுற்றவும் இல்லை என்பதோடு, ராம்குமாருக்கு சுவாதி யார் என்பதே தெரியாது என்கின்ற உண்மையை அவரது பேஸ்புக்கிற்கு உள்ளே கவனிக்கும் நம்மால் உணர முடியும். பேஸ்புக்கில் ராம்குமார் ப்ரெண்ட் லிஸ்ட்டில் சுவாதியின் பெயர் இல்லை. ஒருவேளை ராம்குமார் டெலிட் செய்திருக்கலாம் என்ற கேள்வி வருமானால் அதற்கும் இக்காணொளியில் விடைஇருக்கிறது.

உலகத் தமிழர்களே! உங்கள் மகன் மீது அபாண்டமான கொலை குற்றச்சாட்டை சுமத்தி அவன் உண்மைகளை பேசி விடக்கூடாது என்று அவனுடைய கழுத்தையும் காவல்துறை அறுத்து உங்கள் முன் நிறுத்தினால் உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்? அதே மனநிலையில் தான் ராம்குமாரின் ஏழைப் பெற்றோர்கள் பரிதவிக்கிறார்கள். மறுபுறம் ராம்குமார் எந்த உண்மைகளையும் வெளியே சொல்லிவிடக் கூடாது என்று இன்றுவரை சிறைக்குள் அவனோடு இரு போலிசாரையும் தங்க வைத்து பெரும் அச்சுறுத்தலுக்குள் காவல்துறையினர் வைத்துள்ளனர்.

அதேப்போல் நம் மகளைப் போன்ற சுவாதியின் கொடூரக் கொலை நடந்தேறிய அன்று எத்தனை நெஞ்சங்கள் பதறினவோ அத்தனை நெஞ்சங்களும் சுவாதியின் கொலையில் உண்மையாக குற்றவாளியை தப்ப வைக்கும் தமிழக காவல்துறையினருக்கு எதிராக கண்டனக் குரல்களை வெளிப்படுத்த வேண்டும்.

இதுதான் நீங்கள் சுவாதிக்கும், ராம்குமாருக்கும் செய்யும் பேருதவியாக இருக்கும்.

“பேசினாலும் சாகத்தான் போகிறோம். பேசாவிட்டாலும் சாகத்தான் போகிறோம் எனில் பேசிவிட்டு செத்துப் போக சில இளைஞர்கள் துணிந்து நிற்கிறார்கள். அவர்களில் ஒருவரான தோழர் திலீபன் மகேந்திரன் இன்று போலிசரால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக மிக முக்கிமான இந்த ஆதாரத்தை மக்கள் சக்தியிடம் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். ”

உலகத் தமிழர்களே! இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

விடீயோவைக் காண