தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.
சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ.கெளதமன். தமிழ் உணர்வாளராகிய கெளதம் இயக்கப் போகும் புதிய படம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றியதாம்.
இது தொடர்பாக இயக்குநர் வ. கெளதமன் கூறுகையில், பிரபாகரனின் வீர வரலாற்றை விவரிக்கும் திரைப்படமாக இது இருக்கும்.
தலைவரின் சிறு வயது முதல் நடந்திக்கடல் யுத்தம் வரையில் அவர் நடத்திய யுத்தங்களை உள்ளடக்கிய திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளோம். இந்தப் படத்துக்கான பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.