மும்பையில் கற்பழிப்பு குற்றவாளி மீது முட்டை வீச்சு..!

591

eggமும்பையில் சமீபத்தில் பத்திரிகை பெண் போட்டோகிராபரை 5 பேர் கும்பல் மிரட்டி கற்பழித்தது. அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இன்று (வெள்ளிக்கிழமை) கற்பழிப்பு குற்றவாளிகளை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது குற்றவாளிகளில் ஒருவர் மீது பொது மக்கள் சரமாரி தாக்குதல் நடத்தினார்கள். கோடரியால் தாக்கினார்கள்.

அவர்களிடம் இருந்து போலீசார் குற்றவாளியை மீட்டு அழைத்துச் சென்றனர். என்றாலும் பொதுமக்கள் விடாமல் துரத்திச் சென்று அந்த குற்றவாளி மீது அழுகிய முட்டைகளை வீசினார்கள்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.