தலையை வெட்டி நடுரோட்டில் வீசுவோம் : காதல் ஜோடிகளுக்கு பெற்றோர் எச்சரிக்கை!!

491

Lovers

திருச்சியில் காதலர்களை தலையை வெட்டி நடுரோட்டில் வீசுவோம் என பெற்றோர் மிரட்டியதால் பொலிசில் தஞ்சமடைந்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்தவர் ரஜபுனிசா பேகம்(வயது 20) அங்குள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அசன்(வயது 23) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

இக்காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அப்பெண்ணிற்கு மற்றொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வந்துள்ளனர்.

இதனால் அப்பெண்ணை கல்லூரிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் வீட்டில் வைத்திருந்ததாக தெரிகிறது. ஆனால் அப்பெண் பெற்றோரிடம், நீங்கள் பார்த்த பையனை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரஜபுனிசா, காதலன் அசனுடன் சேர்ந்து ஊரை விட்டு ஓடிவந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் இருவரின் தலையை வெட்டி ரோட்டில் வீசுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த காதல் ஜோடிகள் பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டும் என பொலிசில் புகார் மனு அளித்துள்ளனர்.