பிச்சைக்காரர் உருவில் சீரடி சாய்பாபா!!

718

Baba

குமாரபாளையத்தில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு பிச்சைக்காரர் ஒருவர் சீரடி சாய்பாபா உருவில் வந்ததை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் சாய் பாபா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அழுக்குப் படிந்த உடைகளை அணிந்த முதியவர் ஒருவர் வந்துள்ளார்.

அவர் புகைப்படத்தில் உள்ள சாய் பாபாவைப் போல் அமர்ந்து மக்களுக்கு ஆசி வழங்க தொடங்கியுள்ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் சாய் பாபாவே நேரில் வந்து ஆசி வழங்குவதாகச் சொல்ல, விஷயம் பரபரப்பாகி குமாரபாளையத்தில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர்.

இதனால் கூட்டம் கூடியது. முதியவருக்கு மாலை போட்டு பூக்களால் அபிஷேகம் செய்துள்ளனர். அந்த முதியவரும் எல்லோருக்கும் ஆசி வழங்கினார்.

அவர் பாபாவின் உருவத்தில் வந்து இருப்பதால் இவரே பாபாவின் மறு உருவம் என கருதி ஆண்கள், பெண்கள் அனைவரும் சாஸ்டங்கமாக காலில் விழுந்து வணங்கி உள்ளனர்.

மக்களின் நம்பிக்கை இப்படியிருக்க, நீண்ட நேரத்திற்குப் பிறகு அந்த முதியவரே நான் சாய் பாபா அல்ல நானும் உங்களைப்போல் பாபா பக்தர்தான் எனக் கூறி விட்டு சென்றுள்ளார்.