உருளைக்கிழங்கை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் பெண்!

448


t1

பொதுவாக உணவு பழக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. ஒருவர் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் இன்னொருவருக்கு பிடிக்காமல் போவதுண்டு. ஆனால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கோ அதிசயமான உணவு பழக்கம் இருக்கிறது.அங்குள்ள வெல்லிங்பர்க் நகரில் வசிக்கும் கிளாரி ஜோன்ஸ் என்ற 23வயது பெண்ணுக்கு அவரது குழந்தை பருவத்தில் இருந்தே சாதாரண உணவின் மீது கடும் வெறுப்பு ஏற்பட்டு விட்டதாம்.

இவருடைய முழு பசியையும் போக்கும் உணவு எதுவென்றால் உருளைக்கிழங்குகள் தான். உருளைக்கிழங்குடன் பாலாடைக்கட்டியை சேர்த்து உணவு தயாரித்து சாப்பிடுகிறார். இத்துடன் முட்டைக்கோசையும் அவ்வப்போது சேர்க்கிறார்.இதுவரையில் இவர் ஏராளமான கூடைகள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வந்துள்ளார். இவருக்கு மற்ற உணவை கண்டாலே குமட்டல் வந்து விடுகிறதாம்.இது குறித்து அவர் கூறுகையில்இ ‘உருளைக்கிழங்கை மட்டும் உண்பதால் உடலுக்குரிய போஷாக்கு போதாது தான் என்பதை உணருகிறேன். அதேநேரத்தில் புதிய உணவை சாப்பிட பயமாக இருக்கிறது.


இதனால் நோய் வந்து விடுமோ என அஞ்சுகிறேன். பிறந்த நாள் ‘கேக்’கை கூட சாப்பிட மாட்டேன். என்றாலும் என்னுடைய தாய் விருப்பத்துக்காக ஆண்டு தோறும் கேக் மட்டும் வெட்டி கொண்டாடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

சாப்பாட்டு விசயத்தில் சிலர் படு கில்லாடியாக இருந்தாலும் சாப்பாடு என்றாலே முகத்தைச்சுழிக்கும் சில இளசுகளும் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள் எனவே இந்த கிழங்குப்பிரியையான பெண்ணும் அதற்கு விதிவிலக்கல்லவே?


 

t2

t4

t3