வட்ஸ்அப் தக­வலால் மண மேடை­யிலே நிறுத்­தப்­பட்ட திரு­ம­ணம்!!

639

Whatsapp

வட்ஸ்அப் தக­வ­லினால் திரு­ம­ண­மொன்று நிறுத்­தப்­பட்ட சம்ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்பெற்றுள்­ளது.

தமி­ழ­கத்தின் திரு­வண்­ணா­மலை மாவட்டம் ஆர­ணி­யி­ன­ரு­கே­யுள்ள சேவூர் கிரா­மத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 58). இவ­ரது மகன் மகேஷ் (31). திருச்­சி­யி­லுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி­பு­ரிந்து வரு­கிறார்.

இவ­ருக்கும், ஆரணி எஸ்.வி. நகரை சேர்ந்த மீனா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்ற 20 வயது பெண்­ணுக்கும் திரு­மணம் செய்து வைக்க இரு­வீட்­டாரும் முடிவு செய்­தனர்.

இவர்­க­ளி­ரு­வ­ருக்கும் கடந்த 8 மாதங்­க­ளுக்கு முன்பு நிச்­ச­ய­தார்த்தம் நடந்­துள்­ளது. இதை­ய­டுத்து நேற்று முன்­தினம் சேவூ­ரி­லுள்ள ஒரு தனியார் மண்­ட­பத்தில் திரு­ம­ணத்தை நடத்­த­வி­ருந்­தனர். இரு வீட்­டாரும் திரு­மண வேலை­களில் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வந்­தனர்.

இதற்­காக முன்­தினம் மாலை திரு­மண வர­வேற்பு நிகழ்ச்சி நடந்­தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முகூர்த்த நேரமும் நெருங்­கி­யது. மண­மே­டையில் மகேஷ் அமர்ந்­தி­ருந்த நிலையில், அவரு­டைய செல்­போ­னிற்கு ஆரணி தச­ரா­பேட்டை பகு­தியைச் சேர்ந்த விநா­யகம், என்­பவர் ‘வட்ஸ்­அப்பில் ஒரு குறுந்­த­க­வலை அனுப்­பி­யி­ருந்தார்.

மகேஷ் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்த அந்த குறுஞ்­செய்­தியில், மண­மகள் மீனாவும், விநா­ய­கமும் சேர்ந்­தி­ருக்கும் புகைப்­ப­டங்கள் இருந்­தன.

மேலும் விநாயம் கூறி­ய­தா­வது, எனக்கும், உங்­க­ளுக்கு திரு­மணம் நடக்­க­வி­ருக்கும் பெண்­ணுக்கும் கடந்த 8 மாதங்­க­ளுக்கு முன்பே திரு­மணம் நடந்து விட்­டது.

அதன்­போது நாங்­க­ளி­ரு­வரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்­ப­டங்கள் தான் இவை. நான் திருமணம் செய்த பெண்ணை நீங்கள் எப்­படி திரு­மணம் செய்ய முடியும் என அவர் கூறி­யி­ருந்தார்.

உடனே மகேஷ், அவ­ரது பெற்­றோ­ரிடம் இது­பற்றி தெரி­வித்தார். இதை­ய­டுத்து மகேஷின் குடும்பத்தினர், மண­ம­களின் பெற்­றோ­ரிடம் உங்கள் மக­ளுக்கு ஏற்­க­னவே திரு­மணம் முடிந்துவிட்ட­தாக தகவல் கிடைத்­துள்­ளது.

இது­பற்றி நீங்கள் ஏன் எங்­க­ளிடம் எதுவும் சொல்­ல­வில்லை என கேட்­ட­தற்கு பெண்ணின் பெற்றோர் பதில் எதுவும் கூற­வில்லை என தெரி­கி­றது. இதைத் தொடர்ந்து மகேஷின் குடும்­பத்­தினர் திருமணத்தை நிறுத்தி விட்­டனர்.

இது­கு­றித்து மணி தாலுகா பொலி ஸாரிடம் முறைப்­பாடு செய்­துள்ளார். அதில் ஏற்­க­னவே நடந்த திரு­ம­ணத்தை மறைத்து பெண் வீட்டார் மோசடி செய்­துள்­ளனர். முன்­னெ­டுக்­கப்­பட்ட திரு­மண ஏற்பா­டு­க­ளுக்­காக 5 இலட்சம் ரூபா செல­வா­கி­யுள்­ளது.

குறித்த பணத்தை மண­மகள் வீட்­டா­ரி­ட­மி­ருந்து பெற்­றுத்­தர வேண்டும் என க் கூறி­யி­ருந்­தனர். முறைப்­பாட்டை பதிவு செய்த பொலிஸ் அதி­காரி சின்­னராஜ், அது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றார்.

இந்­த­நி­லையில், வட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பி திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இளைஞர் விநாயகம் தலைமறைவாகியுள்ளார். பொலிஸார் அவரைத் தேடி வரு­கின்­றனர்.