தாயின் சடலத்தை 12 கி.மீ மோட்டார் சைக்கிலில் கொண்டு சென்ற மகன் : தொடரும் ஆவலங்கள்!!

591

Dead2

நாட்டையே மனம் உருக வைத்த ஒடிசா சம்பவத்தை போல் மத்தியபிரதேசத்தில் மகன், தாயின் சடலத்தை 12 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற அவல சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஒடிசாவில் இறந்த தனது மனைவின் உடலை ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதேபோல மற்றொரு சம்பவம் மத்திய பிரதேசத்தின் உலாட் கிராமத்தில் அரங்கிகேறியுள்ளது.

மத்திய பிரதேசம் உலாட் கிராமத்தை சேர்ந்த பர்வதா பாய் என்ற 70 வயது பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது மகன் ஆம்புலன்சை பலமுறை அழைத்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. தொடர்ந்து அவர் முயற்சி செய்த போது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வரமறுத்துள்ளனர்.

இதனால் 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை நடுவில் உட்காரவைத்து 12 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பெண் உயிர் இழந்துள்ளார்.

உடனடியாக மீண்டும் 12 கி.மீ தூரத்திற்கு அந்த பெண்ணின் உடலை இளைஞர்கள் மோட்டார் சைக்கிளிலேயே கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.