காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்துவிட்டு தற்­கொ­லை செய்துகொண்ட இளை­ஞன்!!

601

Murder

தன்னை காத­லிக்க மறுத்த இளம் பெண்ணை அரி­வாளால் சர­மா­ரி­யாக வெட்டிக் கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்­கொலை செய்து கொண்ட சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்பெற்­றுள்­ளது.

இது குறித்து பொலிஸ் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தூத்­துக்­குடி இந்­திரா நகரைச் சேர்ந்த நியூமேன் மகள் என்.பிரான்­ஸினா (24). இவர் சண்­மு­கா­பு­ரத்தில் உள்ள ஒரு தனியார் மழ­லையர் பாட­சா­லையில் 3-ஆம் வகுப்பு ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரிந்து வரு­கிறார்.

பிரான்­ஸி­னாவை அதே பகு­தியைச் சேர்ந்த கீகன் ஜோஸ் (26) என்ற இளைஞர் ஓராண்­டுக்கும் மேலாக ஒரு­த­லை­யாக காத­லித்து வந்­துள்ளார். பல­முறை பிரான்­ஸி­னா­விடம் காதலைச் சொல்லியும் அவர் கீகனை ஏற்றுக் கொள்­ள­வில்லை. இருந்தும் தொடர்ந்து தொந்­த­ரவு செய்துள்ளார் கீகன்.

ஒரு­கட்­டத்தில் கீகனின் தொல்லை தாங்­காமல் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார் பிரான்­ஸினா. அந்த முறைப்­பாட்டின் பேரில் கீகனை வர­வ­ழைத்து பொலிஸார் எச்­ச­ரிக்கை செய்துள்­ளனர்.

சிறிது காலம் தொந்­த­ரவு கொடுக்­காமல் இருந்­தி­ருக்­கிறார் கீகன். இந்­நி­லை­யில்தான் பிரான்ஸினாவுக்கு வீட்டில் அவ­ருக்கு திரு­மணம் நிச்­ச­யக்­கப்பட்­டது.

எதிர்­வரும் 8ம் திகதி பிரான்­ஸி­னா­வுக்கு திரு­மணம் நடை­பெ­ற­வி­ருந்­தது. இதனால் ஆத்திரமடைந்த கீகன் கடந்த ஒரு வார­மா­கவே பிரான்­ஸினா செல்லும் இட­மெல்லாம் பின் தொடர்ந்­தி­ருக்­கிறார்.

பிரான்­ஸினா ஒவ்­வொரு நாளும் அரு­கி­லி­ருக்கும் தேவா­ல­யத்தில் பிரார்த்­தனை செய்­து­விட்டுச் செல்­வதை வழக்­க­மாக கொண்­டுள்ளார்.  அதேபோல் நேற்றும் அவர் தேவா­ல­யத்­துக்குச் சென்றுள்ளார். காலை 8.30 மணி­ய­ளவில் தேவா­ல­யத்­துக்குள் இருந்த பிரான்­ஸி­னாவை கீகன் அரி­வாளால் சர­மா­ரி­யாக வெட்­டினார்.

இதில் அவ­ரது கழுத்து, தலை, முகம் ஆகிய பகு­தி­களில் படு­காயம் ஏற்­பட்­டது. அங்­கி­ருந்து மீட்கப்பட்ட அவர் தூத்­துக்­குடி அரச மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார். ஆனால், சிகிச்சை பல­ன­ளிக்­காமல் அடுத்த சில மணி நேரங்­களில் அவ­ரது உயிர் பிரிந்­தது.

தேவாலயத்தில் பிரான்ஸினாவை வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற கீகன் அவரது சகோ­தரன் வீட்டுக்குச் சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்­ளார்.