விநாயகரின் ஐந்து கரங்கள் கூறும் தத்துவம் பற்றி தெரியுமா?

382

Vinayakar

விநாயகரின் ஐந்து கரங்கள் கூறும் தத்துவம் என்னவென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள்.

* ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது.

* தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது.

* அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது. ஆகவே கணேசமூர்த்தி படைத்தல், அழித்தல், காத்தல் ஆகியவற்றை செய்யும் மும்மூர்த்தியாகிறார்.

* மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது. எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார்.

* தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது. எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.