ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையர் ஒன்பது பேர் பங்கேற்பு!!

350

para olympic

ரியோ டி ஜெனெய்­ரோவில் நடந்­தே­றிய ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவைத் தொடர்ந்து இம்­மாதம் 7 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள பரா­லிம்பிக் விள­யைாட்டு விழா வில் இலங்­கையைச் சேர்ந்த 9 போட்­டி­யா­ளர்கள் பங்குபற்­ற ­வுள்­ளனர்.

ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­றிய 9 இலங்­கை­யர்­களில் ஒரு­வரைத் தவிர்ந்த மற்றைய எண்­ம­ரி­னதும் பெறு­பே­றுகள் தரம் குன்றிக் காணப்­பட்ட நிலையில் பரா­லிம்பிக் போட்டியா­ளர்கள் சாதிக்கும் முனைப்­பு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் ரியோ நோக்கி நாளை புறப்படுகின்­றனர்.

இலங்கை அணியில் எட்டு ஆண் போட்­டி­யா­ளர்­களும் ஒரு பெண் போட்­டி­யா­ளரும் இடம்பெறுகின்றனர். பரா­லிம்பிக் ஆரம்ப விழாவில் இலங்­கையின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பாக்­கியம் அனில் பிர­சன்ன ஜய­லத்­துக்கு கிடைத்­துள்­ளது.

இவர் ரீ 42 பிரிவில் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்­டி­க­ளிலும் நீளம் பாய்­த­லிலும் பங்குபற்றவுள்ளார். காமினி ஏக்­க­நா­யக்க, தினேஷ் பிரி­யன்த ஹேரத் ஆகிய இரு­வரும் எவ் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்­டி­யிலும் சம் பத் ஹெட்­டி­ஆ­ராச்சி எவ் 46 பிரிவு ஈட்டி எறிதல் போட்­டி­யிலும் பங்கு­பற்­று­கின்­றனர்.

அஜித் ஹெட்­டி­ஆ­ராச்சி ரி 44 பிரிவு 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்­டி­க­ளிலும் இந்­திக்க சூல­தாச ரி 42 பிரிவு 100 மீற்றர், 200 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்­டி­க­ளிலும் தங்­க­ளது ஆற்றல்­களை வெளிப்­ப­டுத்­த­வுள்­ளனர்.

அணியில் இடம்­பெறும் ஒரே ஒரு வீராங்­க­னை­யான அமரா இந்­து­மதி ரி 47 பிரிவு 200 மீற்றர், 400 மீற்றர் ஓட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்றார். இவர்­க­ளை­விட சக்­கர இருக்கை டென்னிஸ் போட்­டியில் உபாலி ராஜ­க­ரு­ணவும் வில்­லாளர் போட்­டியில் சம்பத் பண்­டா­ரவும் பங்­கேற்­கின்­றனர்.

ரியோ பரா­லிம்பிக் போட்­டி­களில் பங்­கு­பற்றும் இலங்­கை­யர்கள் பதக்­கங்கள் வென்று வரு­வார்கள் என நம்­பு­வ­தாகக் குறிப்­பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களை வாழ்த்தினார்.

இலங்கை பராலிம்பிக் அணியினருக்கு டயலொக் ஆசியாட்டா நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகின்றது.