வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நேற்று (02.09.2016) மாலை இத்தாலி வாழ் சி.விஜயன் எழுதிய “என் பின்னால் ஒரு நிழல்” எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது.
இந்நிகழவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கவிஞர் யோ.புரட்சி, கலைஞர் மாணிக்கம் ஜெகன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார், நா.பார்த்தீபன் வவுனியா தேசியக்கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் மேழிக்குமரன், கவிஞர் அல்லையூர் சி.விஜயன் மற்றும் சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் தமிழ் விருட்சம் சார்பாக கவிஞர் அல்லையூர் சி.விஜயனுக்கு அவரது கலைப் பணியினை வாழ்த்தி வாழ்த்துப்பா வழங்கி வைக்கப்பட்டது.