சிரியா மீது தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது : ஒபாமா!!

541

obama-immigration-1

சிரியா மீது தாக்குதல் நடத்துவது உறுதி என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்..

அமெரிக்கா தரப்பில் எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அது ஒரு குறுகிய கால நடவடிக்கையாகவே இருக்கும். சிரியா மீதான போரும் சிறிய அளவிலேயே இருக்கும். இது தொடர்பாக நேச நாடுகளின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

சிரியா மீது தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது என்றார்.



இதற்கிடையில் சிரியாவில் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்களை உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.