
12 வயது நிரம்பிய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 63 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிமடை நுகத்தலாவ என்னுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் தனியாக இருந்தபோதே முதியவர் சிறுமியை நேற்று வெள்ளிக்கிழமை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமி வசிக்கும் வீட்டுக்கு அண்மையில் வசிப்பவர் என்று தெரிவித்த வெலிமடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.





