காவிரியை விட பட்மிண்டன் லீக் போட்டி முக்கியமில்லை என பிரபல நடிகரும், டிஸ்கோ சாந்தியின் தம்பியுமான அருண்மொழி வர்மன் ஆவேசமாக கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது நடிகரும், டிஸ்கோசாந்தியின் தம்பியுமான அருண்மொழி வர்மன், வரும் 18 ஆம் திகதி சென்னையில் செலிபிரிட்டி பட்மிண்டன் லீக் போட்டி தொடங்க உள்ளது.
இதில் கன்னட நடிகர்களும் விளையாட உள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில், அவர்கள் இங்கு வந்து விளையாடினால் பிரச்சனைகள் ஏற்படும்.
தமிழக இளைஞர் ஒருவரை அடித்துள்ளனர். தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். உணர்ச்சிப்பூர்வான இப்போரட்டத்திற்கு, நாம் அனைவரும் ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.






