நாட்டிலுள்ள தமிழ், சிங்கள அரச பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்விச் செயற்பாட்டிற்காக மீண்டும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன.
2ம் தவணை விடுமுறைக்காக இப்பாடசாலைகள் கடந்த ஒகஸ்ட் மாதம் 02ம் திகதி மூடப்பட்டது.
இன்று அரச பாடசாலைகள் திறக்கப்படுமாயினும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இடம்பெறும் பாடசாலைகள் திறக்கப்படமாட்டது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் கடந்த ஓகஸ்ட் 12ம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் தவணை விடுமுறை சகல அரச பாடசாலைகளுக்கும் டிசம்பர் 06ம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றையதினம் சமுக மளிக்கமாட்டார்கள்.
தொடர்ந்து மதிப்பீடு முடியும் வரை ஒரு சில பாடசாலைகள் ஸ்தம்பித நிலையிலிருப்பது தவிர்க்க முடியாமலிருக்குமென கூறப்படுகிறது.





