வாழைக் குற்றியில் தோணி செய்து விளையாடிய சிறுவர்கள் பரிதாப மரணம்..!

523

floodபிலியந்தலை, எகொடவத்த பிரதேசத்தில் வாழைக் குற்றியின் உதவியுடன் தோணி செய்து விளையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

விளையாடும்போது சேற்று நீரில் புதைந்து இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான சிறுவன் மற்றும் ஏழு வயதான சிறுமியுமே உயிரிழந்துள்ளளனர்.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை இவர்களது சடலம் பிலியந்தலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.