அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனையான டயான நையத் (64) கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
166 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இவரது இதே முயற்சியானது 41 மணி நேரம் கடலில் நீந்தியபிறகு கடல் சீற்றத்தாலும் ஜெல்லி மீன்கள் கடித்ததாலும் தடைப்பட்டது.
இது அவரது 5வது முயற்சியாகும். 64 வயதான இந்த உறுதியான வீராங்கனையின் கடைசி முயற்சி இதுவாகும். கடலில் நீத்துகிறபோது சுறா மற்றும் ஜெல்லி மீன்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகத்தில் சிலிகான் முகமூடியை அணிந்துள்ளார்.
இந்த சாதனையை முடிக்க அவருடன் 35 உதவியாளர்களும் செல்கின்றனர்.