திருமண வீட்டில் உணவு விஷமானதில் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி : மட்டக்களப்பில் சம்பவம்!!

1158

Puluhan anak panti asuhan mendapat perawatan di Rumah Sakit Umum Daerah (RSUD) Syekh Yusuf, Sungguminasa, Kabupaten Gowa, Sulsel

மட்டக்களப்பு பெரிய கல்லாறு பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற திருமண வீடொன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமானதில் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இன்று கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 3.30 மணியிலிருந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் இவர்களுக்கான அவசர சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாகவும் கல்லாறு மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.ருதேசன் தெரிவித்தார்.