11 மாத பச்சிளம் குழந்தையை துஸ்பிரயோகப்படுத்திய காமுகன் கைது!!

770

abuse1

11 மாத குழந்தையை துஸ்பிரயோகப்படுத்திய 42 வயது காமுகன் ஒருவன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளான்.

டில்லியின் பொலிஸ் குடியிருப்புக்கு அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த குழந்தையின் பெற்றோர் கட்டிட தொழிலாளிகள் என்பதுடன் இவர்கள் பொலிஸ் குடியிருப்பு பகுதியில் குடிசை வீடொன்றில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை இரவு தூங்கிக் கொண்டிருந்த போது அவரது தாய் அருகில் உள்ள தனது பெற்றோருடன் கதைத்துக் கொண்டிந்துள்ளார்.

பின்னர் வீடு வந்து பார்க்கும் போது படுக்கையில் கிடந்த அவரது குழந்தை காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தாய் அயலவர்களின் உதவியுடன், பொலிஸாருடன் இணைந்து உடனேயே குழந்தையை தேடியுள்ளனர்.

இதன்போது குழந்தை பாழடைந்த இடத்தில் இருந்து அதிகாலை 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையை கடத்திய 42 வயது சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த குழந்தையை இரண்டு மணித்தியாலங்கள் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக சந்தேகநபர் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.