நான் ஏன் வாழ வேண்டும்? சிறையிலேயே சாகின்றேன் : பேரறிவாளன்!!

636

perarivaalan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 13ம் திகதி பேரறிவாளனை ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினார்.

இதில் பேரறிவாளனுக்கு கை, கால் மற்றும் தலைப்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில் தன் மகனை பரோலில் விட வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக்கு சென்று மனு கொடுத்தார்.

இதற்கிடையே மருத்துவ சிகிச்சை முடிந்து பேரறிவாளன் சிறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் கூறுகையில், ஏழு பேரும் ஒன்றாக விடுதலையாக வேண்டும் என நம்பிக்கையோடு பேரறிவாளன் காத்துக் கொண்டிருக்கிறார்.

நம்மை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு உறுதியாக இருந்தாலும், அரசுக்கு எதிரான வழக்குகளால் தாமதம் ஏற்படுகிறது.

எனவே அரசுக்கு எதிரான வழக்குகள் வேண்டாம் என்பதுதான் பேரறிவாளனின் கருத்தாக இருக்கிறது, இதைச் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, பேரறிவாளனுக்கு எதிரான தாக்குதலைத் தூண்டிவிட்டுள்ளனர்.

கைதி ராஜேஷ் கண்ணாவிடம், உனக்கு எதிராக சிறை அதிகாரிகளிடம் போட்டுக் கொடுப்பதே பேரறிவாளன்தான் என அவரைத் தூண்டிவிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்ததில் இருந்தே பேரறிவாளன் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

நண்பர்களே இப்படி செய்வார்களா? எதற்காக நான் உயிருடன் இருக்க வேண்டும்? சிறையிலே செத்துப் போய்விடுகிறேன் என கதறி அழுகிறார்.

நரம்பு, மூட்டு பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் போது வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஆனால் தற்போது பேரறிவாளன் அதைதான் எடுத்துக் கொள்கிறார், இதனால் என்ன விளைவுகள் ஏற்படுமோ தெரியவில்லை என பதட்டத்துடன் கூறியுள்ளார்.