ஆசிரியருக்கு முத்தம் கொடுத்தால் பரீட்சையில் சித்தி : சீன ஆசிரியரின் அத்துமீறல்!!

572

teacher-extorts-students-for-kisses-01

சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் தனது மாணவிகளிடம் இருந்து முத்தம் பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

வடக்கு சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் தங்கள் பரீட்சையில் சித்தியடைவதற்கு படித்தால் மட்டும் போதாதாம். நன்கு முத்தமிடவும் தெரிந்திருக்கவேண்டுமாம்.

இது அரசாங்க உத்தரவல்ல கல்விக்கண் திறக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரின் காமக் கட்டளை. பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் வைத்தே மாணவிகளை ஒருவர் பின் ஒருவராக நின்று தன்னை முத்தமிட வைத்திருக்கிறார்.

அதற்கு ஒத்துக் கொள்ளாத மாணவிகள் ஆசிரியர் தங்களை முத்தமிட சம்மதிக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் சரிப்பட்டு வராதவர்களை தேர்வில் தோல்வியடையச் செய்து விடுவாராம் இந்த ஆசிரியர்.

சிரித்துக் கொண்டே முத்தங்களை பெறும் ஆசிரியரின் அத்துமீறல்களை சிலர் புகைப்படங்களாக எடுத்து அதை இணையத்தில் போட்டு விட இப்போது ஆசிரியரின் அராஜகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.