நாவற்பழம் பறிக்க மரத்தில் ஏறிய மாணவன் விழுந்து மரணம்!!

1134

boy

நாவற்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய பாடசாலை மாணவர்கள் மரக்கிளை முறிந்து கீழே மதில் சுவரில் விழுந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது ஒருவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் பொத்துவில் அறுகம்பையில் உள்ள சின்ன உல்லையில் நிகழ்ந்துள்ளது. அப்துல்லா என்ற (16 வயது) மாணவன் உயிரிழந்ததுடன் (14 வயது) றிஸ்வான் என்ற மாணவன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விரு மாணவர்களும் அறுகம்பை சின்ன உல்லை அல்-அக்ஷா கல்லூரியில் 8ம் தரத்தில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்களாவர். நாவற்பழம் பறிப்பதற்காக இருவரும் மரத்தில் ஏறியதுடன் இருவரும் ஒரே கிளையில் இருந்த பழத்தை பறிப்பதற்காக கிளையை அசைத்த போது, கிளை முறிந்து இருவரும் கீழே விழந்தனர்.