பயணத்தினை இலகுவாக்க அறிமுகமாகிறது பறக்கும் கார்!!

368

c4

பறக்கும் கார்களை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஏரோ மொபில் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் காருக்கு ஏரோ மொபில் 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது.

வீதியில் பயணிக்கும் சாதாரண கார் போன்று காட்சியளிக்கும் இந்த கார், ஒரு ஆளியினை இயக்குவதன் மூலம் இறக்கைகளைக் கொண்டதாக மாறும். இதன்மூலம் வானில் பறக்கவும் முடியும் என்று ஏரோ மொபில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தைப் போல் இல்லாமல் எந்தவொரு சமதளப்பரப்பிலும் இந்த காரைத் தரையிறக்கவும், அந்த பரப்பிலிருந்தே வானில் பறக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மீற்றர் நீளமும், 2.4 மீற்றர் அகலமும் கொண்டள்ளது.

குறித்த கார் தரையில் அதிகூடிய வேகமாக மணிக்கு 160 கிலோமீற்றரும், பறக்கும் போது மணிக்கு 320 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நீண்டதூரப் பயணங்களுக்கு ஆகும் நேரத்தைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்கவும் முடியும் என்று ஏரோ மொபில் நிறுவனம் கூறியுள்ளது.

c1 c2 c3 c5