மலவாயிலில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக தங்கம் கடத்த முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 1.10 அளவில் அவர் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
477 கிராம் அடங்கிய தங்க தகடுகளை குறித்த நபர் மலவாயிலில் மறைத்து வைத்து விமானத்தில் பயணிக்க முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இரண்டு தங்க வளையல்கள் மற்றும் மோதிரம் ஒன்றும் குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
வளையல்கள் 45 கிராமும் மோதரம் 15 கிராமும் நிறையுடயவை என கண்டறியப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட தங்கத்தின் மொத்த பெறுமதி 27 லட்சம் என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.





