வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை கழிவுநீர் சர்ச்சை : சுகாதார அமைச்சர் விஜயம்!!

261

 
வவுனியா இராசேந்திரங்குளத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் (30.09) திடீர்விஜயமொன்றை மேற்கொண்டார்.

தொழிற்சாலையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சரின் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

வவுனியா இராசேந்திரங்குளம் பகுதியில் இயங்கும் ஆடைத்தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் அயலிலுள்ள குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் பெரிதும் கஸ்ரப்படுவதாகவும் அத்துடன்; கழிவு நீர் இராசேந்திரங்குளத்தில் விடப்படுவதாகவும் பொதுமக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அமைச்சர் அந்தப்பகுதிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு களநிலமைகளை ஆராய்ந்தார்.

இதன்போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச அதிகாரி, மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி, பொதுசுகாதார பரிசோதகர் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இந்த விஜயத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் உடனிருந்தார். தொழிற்சாலையின் உள்ளக கழிவுநிர் முகாமைத்துவம் தொடர்பில் பார்வையிட்டதுடன் நிறுவன அதிகாரிகளுடன் நிலமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது இரண்டு வாரகால அவகாசத்தில் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதாக தொழிற்சாலை நிர்வாகம் அமைச்சருக்கு உறுதியளித்தது.

இதனைத் தெடர்ந்து கற்பகபுரம் கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் மக்கள் சந்திப்பிலும் சுகாதார அமைச்சர் கலந்துகொண்டு கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

1 img_4440 img_4445 img_4458 img_4469